ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தமது கல்வித் தகுதியை பகிரங்கப்படுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
வேட்பாளர்கள் பகிரங்க விவாதங்களில் ஈடுபட்டாலும் தமது கல்வி தகைமையை வெளிப்படுத்துவது முக்கியம் என்றும் கூறியுள்ளார்.
ஒரு அற்புதமான ஸ்திரமான மீட்சிக்குப் பிறகு இந்த நாட்டைச் சிதைக்க இடமளிக்க முடியாது என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும், தமது உயர்தரம், டிகிரி அல்லது முதுநிலை தகைமைகளை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.