கல்வி அமைச்சின் இணையதளம் இன்னும் முடங்கிய நிலையில்

இணையத் தாக்குதல் காரணமாக செயலிழந்த கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இதுவரை மீட்டெடுக்கப்படவில்லை.

கல்வி அமைச்சின் இணையம் மீதான ஊடுருவல் இலங்கையில் உள்ள இணைய இணைப்பில் இருந்து நடத்தப்பட்டமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேகநபரை அடையாளம் காண உள்நாட்டு சேவை வழங்குனர்களிடம் தகவல் கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சைபர் தாக்குதலுக்கு உள்ளான கல்வி அமைச்சின் இணையத்தளம் தொடர்ந்தும் செயலிழந்துள்ளது.

இணையம் மீதான ஊடுருவல் தொடர்பான அனைத்து விபரங்கள் அடங்கிய அறிக்கை இன்று கல்வி அமைச்சிடம் கையளிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *