பாரிய குற்றமிழைத்தவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் – சிறைச்சாலைகள் திணைக்களம்

புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க கைதிகள் பொது மன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ளனர்.

அபராதம் செலுத்தாததால் சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களும் பாதி அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை காலத்தை முடித்த 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளும் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர்.

தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து 40 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனையை முடித்த கைதிகளும் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இருப்பினும் பாரதூரமானதாகக் கருதப்படும் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பொது மன்னிப்புக்கு தகுதியான 779 கைதிகள் எதிர்வரும் 13 ஆம் திகதி சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.