சாட் குடியரசுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தும் இலங்கை

சாட் குடியரசுடன் இராஜதந்திரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இலங்கை தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது.

ஆபிரிக்க கண்டத்தின் 46 நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ள இலங்கை அரசாங்கம், சாட் குடியரசுடனும் இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தவுள்ளது.

பல்தரப்பு பங்காளர்களாக சாட் குடியரசானது ஐக்கிய நாடுகள் சபையிலும் ஏனைய பலதரப்பு மாநாடுகளிலும் இலங்கைக்கான ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளது.

இந்நிலையில் சாட் குடியரசுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்தற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.