மாணவர் கடனை எளிதாக்கும் புதிய திட்டங்களை அறிவித்தார் பைடன் !!

நவம்பரில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாணவர்களுக்கான கடன் வசதிகளை வழங்கும் திட்டங்களை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

வருமானத்தைப் பொருட்படுத்தாமல் கடன் வாங்குபவர்களுக்கு 20,000 டொலர் வரை வட்டி இல்லாமல் கடனை வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.