ஆங்கில மொழியில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 2500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆங்கில மொழியின் க.பொ.த சாதாரணதரதிற்கு பாடங்களை கற்பிப்பதற்காக தற்போது அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை 4,441 ஆக இருப்பினும், அதற்காக 6500 ஆசிரியர்களின் தேவை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில மொழி மூலமான பாடங்களை கற்பிக்கின்ற 765 பாடசாலைகளின் எண்ணிக்கையை, 1,000 ஆக அதிகரித்து ஆசிரியர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஆசிரியர் எண்ணிக்கையை 6,500 வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும் ஆங்கில மொழி மூலமான பாடங்களைக் கற்பிக்கின்ற 2,500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் ஜனாதிபதியும் கல்வி அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.