இலங்கை அரசாங்கம் கூறுவதில் உண்மையில்லை – சம்பிக்க

அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ள போதிலும் பல பில்லியன் டொலர் செலுத்த இலங்கை தவறியுள்ளது என சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய வங்கியின் தரவுகளை மேற்கோளிட்டு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலேயே சம்பிக்க ரணவக்க இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு வங்குரோத்து அடைந்துவிட்டதாக அறிவித்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 6 பில்லியன் டொலர்களை இலங்கை செலுத்தத் தவறிவிட்டது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கையிருப்பு 5 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதை மத்திய வங்கியின் தரவுகள் காட்டுகின்ற போதிலும் இதுவே யதார்த்தம் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

உலக வங்கி, ஆசிய பிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட கடன்களின் தொகை 3 பில்லியன் டொலர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.