முதல் காலாண்டில் வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணம் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது என தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய மொத்தத் தொகை தோராயமாக 1.53 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது என தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 8.7 சதவீதம் அதிகம் என்றும் மார்ச் மாதத்தில் மாத்திரம் இலங்கைக்கு 572.4 மில்லியன் டொலர் அனுப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு மே மாதம் அமைச்சராக பதவியேற்றத்தில் இருந்து மொத்தம் 10 ஆயிரத்து 263 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு உரியமுறையில் அனுப்பட்டுள்ளதாக மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் பணம் அனுப்பும் தொழிலார்களுக்கு விசேட சலுகைகளை அண்மையில் அரசாங்கம் அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.