ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.
பொதுஜன பெரமுனவின் ஆறு உறுப்பினர்கள், அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட எடுத்த நடவடிக்கை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை அடுத்து அந்த 6 பேர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சி தீர்மானம் எடுக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நாளை நடைபெறுகின்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தின் போது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசியிருந்த மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நாமல் ராஜபக்ஷ இன்னும் தயாராக இல்லை என்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொதுஜன பெரமுன வேட்பாளரை அறிவிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.