இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக, இலங்கை செல்லும் தனது பிரஜைகளுக்கான பயண ஆலோசனையை பிரித்தானியா புதுப்பித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார, அரசியல் நெருக்கடிகளால் இலங்கைக்கு செல்வதற்கான பயண ஆலோசனைகளை பல நாடுகளும் கடுமையாக்கியிருந்தன.
இந்நிலையில் பாதுகாப்புத் தேவைகள், நாட்டின் பாதுகாப்பு நிலைமை, சுகாதார, மருத்துவ வசதிகளுக்கான அணுகல் தொடர்பான முந்தைய தகவல்களை பிரித்தானியா புதுப்பித்துள்ளது.
மேலும் உணவு, எரிபொருள், மருந்துத் தட்டுப்பாடு குறித்து முந்தைய ஆலோசனையில் இருந்த தகவல்கள் இந்த புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குவதற்காக எதிர்மறையான தகவல்களை நீக்குமாறு பிரித்தானியாவில் உள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் அழுத்தம் கொடுத்தது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதேநேரம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 27 ஆம் திகதிக்கு இடையில் பிரித்தானியாவில் இருந்து 53 ஆயிரம் 928 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என தரவுகள் காட்டுகின்றன.