கஜகஸ்தான் எல்லையில் அணை உடைப்பு : 4,000 மக்களை வெளியேற்றியது ரஷ்யா

கசகஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள ஒரன்பர்க் பகுதியில் உள்ள அணை உடைந்த காரணத்தினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து 4,000க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

1,019 சிறுவர்கள் உட்பட 4,208 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தால் 2,500 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டதாகவும் ஒரன்பர்க் ஆளுநர் அலுவலகம் கூறியுள்ளது.

வெள்ளப்பெருக்கு உச்சத்தை தோட்ட நிலையில் 230,000 மக்கள் வசிக்கும் எல்லை நகரமான ஓர்ஸ்கில் பகுதியில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து மட்டும் சுமார் 2,000 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அப்பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் பலரை மீட்கும் நடவடிக்கையில் மீட்புப் பணியினர் ஈடுபட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2014 இல் கட்டப்பட்ட இந்த அணை, அலட்சியம் காரணமாகவும் பாதுகாப்பு விதிகளை மீறியதாகவும் தெரிவித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.