கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றுவது அவசியம்
புத்தாண்டை முன்னிட்டு நீண்டகால விடுமுறை வழங்கப்படும் நிலையில் அரச அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றுவது அவசியம் என பொதுநிர்வாக அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாவட்ட, பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி சபையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் பிரதேச செயலாளர்கள் உட்பட அனைத்து அரச ஊழியர்களும் அரச நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து தேவையான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என பொதுநிர்வாக அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை இந்த விடுமுறைக் காலத்தில் இடையூறு இன்றி மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.