இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா யுத்தம் தொடர்பாக வைத்திருக்கும் கொள்கையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியறுத்தியுள்ளார்.
உதவிப் பணியாளர் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் எனவே உடனடி போர்நிறுத்ததிற்கு நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேலை வலியுறுத்தும் கடுமையான வார்த்தைகளை அவர் பிரயோகித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜோ பைடனுக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே அவர் இதனை வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து வடக்கு காசா பகுதியுடனான அதன் எல்லை வழியாக தற்காலிகமாக மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பதாக நெதன்யாகுவின் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஹமாஸ் போராளிகள் கடந்த ஆண்டு ஒக்டோபரில் மேற்கொண்ட தாக்குதலுக்கு பின்னர் போருக்கான நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.
அத்தோடு காசாவில் உயிரிழக்கும் பொதுமக்களின் எண்னிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தாலும் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு வெடிபொள்ட்களை வழங்கும் நடவடிக்கையை அமெரிக்க நிறுத்தவில்லை.
இவ்வாறிருக்கையில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனத்தின் ஏழு உதவிப் பணியாளர்களைக் கொன்ற தாக்குதல் குறித்து நடைபெற்ற 30 நிமிட தொலைபேசி அழைப்பின் போதே ஜோ பைடன் யுத்தம் தொடர்பான கொள்கையை மாறுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் அஷ்டோட் மற்றும் எரெஸ் சோதனைச் சாவடி வழியாக மனிதாபிமான உதவிகளை தற்காலிகமாக வழங்க இஸ்ரேல் அனுமதிக்கும் என்றும் இந்த உதவி, மனிதாபிமான நெருக்கடியைத் தடுக்கும் என்றும் இஸ்ரேலிய பிரதமர் அலுவலம் குறிப்பிட்டுள்ளது.