ஹிங்குராங்கொட உள்நாட்டு விமான நிலையத்தை சர்வதேச கேந்திர நிலையமாக மாற்றுகிறது அரசு
வரலாற்று சிறப்புமிக்க பொலன்னறுவை – ஹிங்குராங்கொட உள்நாட்டு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாறுவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்தின் றோயல் விமானப்படைக்கு முக்கிய தளமாக மின்னேரியா என அழைக்கப்பட்ட இந்த விமான நிலையம் செயற்பட்டது.
இந்நிலையில் இந்த வரலாற்று சிறப்புமிக்க விமான நிலையத்தை பரபரப்பாக இயங்கக்கூடிய சர்வதேச விமான நிலையமாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன் ஆரம்ப நிர்மாண மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வரவு செலவுத் திட்டத்தில் 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்பிரகாரம் முதற்கட்மாக 2287 மீட்டர் நீளமும் 46 மீட்டர் அகலமும் கொண்ட ஓடுபாதையை 2500 மீட்டர் நீளத்திற்கு விரிவுபடுத்தவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
இதனை தொடந்து ஏ320 ரக விமானத்தையும் போயிங் பி737 உள்ளிட்ட பெரியாராக விமானங்களையும் தரையிறக்க முடியும் என்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.