சுதந்திரக் கட்சியின் அரசியல் தீர்மானங்கள் கட்சியின் மத்திய குழுவினால் மட்டுமே தீர்மானிக்கப்படும் என அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு இடைக்கால தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த முறைப்பாட்டையடுத்து பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு எதிர்வரும் 18ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.
நீதித்துறையில் முன்வைக்கப்பட்ட சட்ட விளக்கத்தின் மூலம் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கட்சியின் எதிர்கால அரசியல் தீர்மானங்களை கட்சியின் உயர்மட்ட குழுக்களே மேற்கொள்ளும் என ரோஹன லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.