தாய்வானில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து காணாமல் போன 18 பேரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
குறைந்த மக்கள்தொகை கொண்ட கிழக்கு மாகாணமான ஹூலியன் பகுதியில் கடந்த புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது,
நிலநடுக்கம் காரணமாக 10 பேர் உயிரிழந்த அதேநேரம் 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நிலநடுக்கம் காரணமாக வீதிகள் உடைந்தமையால் டாரோகோ தேசிய பூங்காவில் சுமார் 400 பேர் தேசிய சிக்கியுள்ளனர் என்றும் இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணாமல் போன 18 பேரை கண்டுபிடிப்பதற்கான மீட்பு நடவடிக்கைகள் தொடர்வதாக தாய்வானின் தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.