ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தசேனவின் மறைவை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு வீரசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
திடீர் சுகயீனம் காரணமாக அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நந்தசேன நேற்று தனது 69வது வயதில் காலமானார்.
அனுராதபுர மாவட்டத்தில் அவருக்கு அடுத்தபடியாக 38,242 வாக்குகளைப் பெற்ற வீரசேன கமகேவின் பெயர் குறித்த பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டது.
நந்தசேனவின் மறைவையடுத்து நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகி உள்ளதாக, நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் வெற்றிடமாக உள்ள பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற பதவிக்கு வீரசேன கமகேவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.