கொழும்பில் 100 புலனாய்வு உத்தியோகத்தர்கள்

கொழும்பில் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் சுமார் 100 புலனாய்வு உத்தியோகத்தர்கள் மீண்டும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் வாகன திருட்டு, தங்க நகை கொள்ளை போன்ற குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் அவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் வழங்கிய பணிப்புரைக்கு அமைவாக மேல் மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இந்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக, நாடளாவிய ரீதியில் பாதாள உலகக் கும்பல், போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்

இந்நிலையில் பண்டிகை காலத்திலும் இந்த நடவடிக்கை தொடரும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேநேரம் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடும் ஊழல் அதிகாரிகளை அடையாளம் காணும் பணியில் புலனாய்வு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.