பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாளை முதல் விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் கூறியுள்ளார்.
அதன்படி, 200 விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் தினமும் 12 ரயில்களை விசேட சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் நேற்று தெரிவித்தது.
எதிர்வரும் 15ஆம் திகதி வரை ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.
தமது சொந்த ஊருக்கு சென்று திரும்பும் மக்களுக்காக இந்த விசேட ரயில் சேவைகளை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.