மாட்ரிட் பகிர்ங்க டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்காக சிமோனா ஹெலெப், கரோலின் வொஸ்னியாக்கி, கெய் நிஷிகோரி ஆகியோருக்கு வைல்ட் கார்ட் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊக்கமருந்து தடையை எதிர்கொண்ட முன்னாள் விம்பிள்டன் சம்பியனான 32 வயதான சிமோனா ஹெல்ப் இந்த மாதம் நடைபெற உள்ள மாட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாடவுள்ளார்.
தடைக்கு எதிராக சிமோனா ஹெலப் தாக்கல் செய்த மேன்முறையீடு பரிசீலிக்கப்பட்ட நிலையில் நான்கு ஆண்டு வழங்கப்பட்ட தடை ஒன்பது மாதங்களாக குறைக்கப்பட்டது.
இதனை அடுத்து கடந்த மாதம் மியாமி பகிரங்க டென்னிஸ் தொடருக்காகவும் அவருக்கு வைல்ட் கார்ட் அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசாவிடம் தோல்வியடைந்தார்.
இதேநேரம் மாட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டிக்கு கரோலின் வொஸ்னியாக்கியும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை மாட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் விளையாட கெய் நிஷிகோரிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடர் இம்மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் மே 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.