கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://moe.gov.lk, அடையாளம் தெரியாத நபர்களால் ஹக் செய்யப்பட்டுள்ளது.
குறித்த தளத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை முன்னிலைப்படுத்தியுள்ள ஹக்கர் சட்டவிரோதமாக இணையத்தளத்திற்குள் நுழைந்தமைக்கு மன்னிப்புக் கோரிய செய்தியையும் பதிவிட்டுள்ளனர்.
தனது பெயர் அநாமதேய EEE என்றும் தான் தற்போது உயர் தரத்தில் கல்விகற்று வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைப் பிரஜை என்ற வகையில் தனது நாட்டின் பாதுகாப்பிற்காக இதனைத் தெரிவிப்பதாகவும் அதை சரி செய்யுமாறும் அதில் பதிவிடப்பட்டுள்ளது. ஹக் செய்யப்பட்டதை அடுத்து குறித்த இணையத்தளம் தொடந்து இயங்கமால் உள்ளது.
இந்த சம்பவம் இலங்கை அரசாங்கத்தின் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இணைய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கவலையை எழுப்பியுள்ளது.