15 முதல் 49 வயதிற்கு உட்பட்டவர்கள் எய்ட்ஸ் பரிசோதனை செய்யுங்கள்

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கைகளின் போது ஸ்பா ஊழியர்கள் பலருக்கு பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் இருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனவே தொடர்ச்சியாக பாலியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடும் 15 முதல் 49 வயதிற்கு உட்பட்டவர்கள் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொள்வைத்து அவசியம் என எயிட்ஸ் கட்டுப்பாட்டு நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

தமது உதவியை நாடி சோதனைச் செயல்பாட்டில் ஈடுபடும் நபர்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அண்மையில், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளைத் தொடர்ந்து சுமார் 120 யுவதிகள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த சட்டவிரோத ஸ்பாக்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதில் 15 வயது சிறுமி உட்பட இரண்டு பெண்களுக்கு எயிட்ஸ் இருப்பது அடையாளம் காணப்பட்டது என்றும் மேலும் 8 பேருக்கு பாலியல் ரீதியான நோய் அறிகுறிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.