புதிய நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில் குவைத் மக்கள் !!

குவைத்தில் அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமீபத்திய முயற்சியின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் இன்று நடைபெறுகின்றது.

அரச குடும்பத்திற்கும் நாடாளுமன்றதிற்கும் இடையில் தொடந்தும் முறுகல் நிலை ஏற்பட்டு வந்த நிலையில் சில ஆண்டுகளின் பின்னர் இந்த தேர்தல் நடைபெறுகின்றது.

ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல் சபாவின் மரணத்திற்குப் பின்னர் 83 வயதான ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல் சபா அரசராக கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

4.2 மில்லியன் மக்கள் வசிக்கும் வளைகுடா நாடான குவைத்தில் 8 இலட்சத்து 35 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

50 நாடாளுமன்ற இடங்களை நிரப்புவதற்காக நடைபெறுகின்ற இந்த தேர்தலில் சுமார் 200 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி அரசர், அரசியலமைப்பை மீறி நாடாளுமன்றத்தை கலைத்த நிலையில் இந்த தேர்தலில் பெருமளவிலான பொதுமக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.