நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை திரட்டுவதற்கு ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த முயற்சி கைகூடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதனை கலைத்து, முன் கூட்டியே பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கொத்தோடு அவர்கள் செயற்பட்டுள்ளனர்.
இருப்பினும் அவர்களினால் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்த பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அமைச்சரவைக்கும் தெரிவித்ததாக அறியமுடிகின்றது.
எவ்வாறாயினும் பசில் ராஜபக்ஷவிற்கு விசுவசமானவர்கள் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதனை கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என கோரியிருந்தனர்.
எவ்வாறாயினும், முன்கூட்டியே பொதுத் தேர்தலுக்கு செல்ல பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இல்லாத காரணத்தினால் அவர்களின் இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
செப்டம்பர் 17 முதல் ஓக்டோபர் 18 க்கு இடையில் ஜானதிபதி தேர்தல் நடைபெறும் என்றும் இதற்கான அறிவிப்பு ஜூலை இறுதி அல்லது ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் வெளியாகும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.