தெல்லிப்பளை யூனியன் கல்லூரி விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு, தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகரிக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.
நாளைதினம் பிற்பகல் 2.30 ற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்கும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை யூனியன் கல்லாரியின் இல்ல விளையாட்டு போட்டியில் இடம்பெற்றிருந்த அலங்காரம் தொடா்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
குறிப்பாக இல்ல விளையாட்டு போட்டி அலங்காரம் தொடர்பாக அதிபர், ஆசிாியர்கள், மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்ட விடயம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த சம்பவம் மனித உரிமைகளை மீறும் செயல் என தெரிவித்து இலங்கை ஆசிாியர் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் பொலிஸாருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.