25 ஆண்டுகளின் பின்னர் தாய்வானில் ஏற்பட்ட சந்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.
காயமடைந்தவர்கள் எண்னிக்கை சுமார் 900 ஐ கடந்துள்ளதாக தாய்வான் அதிகாரிகளை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 77 பேர் சுரங்கத்திலும் கட்டிட இடிபாடுகளுக்குள்ளும் சிக்கியுள்ளதாகவும் மீட்புப்பணியினர் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 8.00 மணியளவில் 7.2 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் காரணமாக ஜப்பானின் தெற்கு பகுதிக்கும் பிலிப்பைன்ஸுக்கும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இதற்கு முன்னர் 1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 2,400 பேர் உயிரிழந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.