உக்ரைனுக்கு நீண்டகால இராணுவ உதவியை வழங்குமாறு நேட்டோ வலியுறுத்தல்

உக்ரைனுக்கான நீண்ட கால ஆயுத விநியோகத்திற்கு கூட்டணியில் உள்ள உறுப்பினர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐந்தாண்டுக்கான 100 பில்லியன் யூரோ நிதிக்கான திட்டம் குறித்து அமைச்சரவை இன்று விவாதித்து வரும் நிலையில் நேட்டோ தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு அவசர தேவைகள் இருப்பதாகவும் அவர்களுக்கான ஆதரவை தாமதப்படுத்துவது போர்க்களத்தில் அவர்களுக்கு விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே உக்ரைனுக்கு நீண்ட காலத்திற்கு தேவையான பாதுகாப்பு உதவிகளை உறுதி செய்வது அனைவரதும் கடமை என நேட்டோ தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேநேரம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போர் நீடிக்கும் நிலையில் இராணுவ ஆட்சேர்ப்பிற்கான வயது எல்லையை உக்ரைன் 25 ஆகக் குறைத்துள்ளது.