தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் இருந்து வெளி மாகாணங்களுக்கான விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக இந்த விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.