கடந்த வருடத்தில் மட்டும் பொலிஸ் காவலில் இருந்த 24 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனை தெரிவித்தார்.
இதேநேரம் 2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இவ்வாறான 07 சம்பவங்கள் பதிவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கடந்த வருடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு 9 ஆயிரத்து 714 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.