முருகன், றொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் இலங்கையை வந்தடைந்தனர்…!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், றொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இன்று மதியம் இலங்கையை வந்தடைந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர்களிடம் பல மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து அவர்கள் உறவினர்களை சந்தித்து ஆரத்தழுவி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து கடந்த 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட அவர்கள் தொடர்ந்தும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

சுமார் ஒன்றை வருட காலமாக சிறப்பு முகாமில் இருந்த சாந்தன் கடந்த மாதம் சுகயீனம் காரணமாக உயிரிழந்த நிலையில் எஞ்சிய மூவரையும் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை வந்தவர்களை பார்வையிட அவர்களது உறவினர்கள் விமான நிலையத்திற்கு விரைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *