வரிச்சலுகை காரணமாக மொத்த வருவாயில் சுமார் 56 சதவீதமான வருமான இழப்பு !

2020ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகை காரணமாக மொத்த வருவாயில் சுமார் 56 சதவீதமான வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் நிதி அமைச்சினால் கடந்த 31 ஆம் திகதி வெளியிடப்பட்ட வரிச் செலவின அறிக்கை’ என்ற ஆவணத்தை மூலமாகக் கொண்டே இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை வழங்கிய பல்வேறு சிறப்பு வரிச் சலுகைகள் காரணமாக இழக்கப்பட்ட மொத்த வருவாய் குறித்த அரசாங்கத்தின் மதிப்பீடுகளை இந்த ஆவணம் சுட்டிக்காட்டுகின்றது.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் அரையாண்டு திட்டத்தின் அடிப்படையில் வரி விலக்கு பெறும் நிறுவனங்களின் பட்டியலை விரைவில் வெளியிடுவோம் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

சர்வதேச சிறந்த நடைமுறைகளிற்கு ஏற்ப இலங்கையின் நிதி அறிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் என வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் அறிவித்துள்ளது.

2022 மற்றும் 2023 இன் நிதியாண்டில் குறிப்பாக ஏப்ரல் மாதம் தொடக்கம் மார்ச் வரையில் வரி வருமானமாக மொத்தமாக 978 பில்லியன் ரூபாயை ஈட்டியதாக அரசாங்கம் கடந்த 31ஆம் திகதி தெரிவித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *