உக்ரைனில் இருந்து ஐரோப்பிய நாடுகள் வழியாக அனுப்பப்பட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன – ரஷ்யா

உக்ரைனில் இருந்து கிறிஸ்தவ மத சின்னங்களில் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்ட பல கிலோ வெடி பொருள்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யாவின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

லாட்வியன் எல்லைக்கு அருகிலுள்ள வடமேற்கு பிஸ்கோவ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டதாக மத்திய பாதுகாப்பு சேவை அறிவித்துள்ளது.

இந்த வெடிபொருள்கள் ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, போலந்து, லிதுவேனியா, லாட்வியா ஆகிய நாடுகளின் வழியாக சென்றதாகவும் அறிவித்துள்ளது.

அதில் வீட்டில் தயாரிக்கப்பட்ட 70 கிலோ வெடிபொருள்கள், வெடி மருந்துகள் என்பன சிலைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரஷ்யா மத்திய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் குறித்த சம்பவம் தொடர்பாக உக்ரைன் எவ்வித கருத்துக்களையும் உடனானடியாக வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *