4,500 ரூபாய் இல்லை இப்போது 3,420 ரூபாய் : விசேட சலுகையினை அறிவித்தது சதொச !!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு விசேட சலுகையினை சதொச விற்பனை நிலையம் அறிவித்துள்ளது.

இந்த சலுகையை இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும் என சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி 4,500 ரூபாய் பெறுமதியான 11 உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை 3,420 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இறக்குமதி செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை, லங்கா சதொச விற்பனை நிலையங்களில் 36 ரூபாயாக குறைத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சதொச விற்பனை நிலையங்களில் முட்டை ஒன்று 43 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் தற்போது முட்டையின் விலை 7 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *