சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

சுற்றுலாத்துறையின் தேவைக்கு ஏற்ற வான்களையும் சிறிய ரக பேருந்துகளையும் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, 6 முதல் 15 இருக்கைகள் கொண்ட மின்சார மற்றும் ஹைபிரிட் வான்கள் இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக 16 முதல் 30 இருக்கைகள் கொண்ட மினிபஸ்கள், 30 முதல் 45 இருக்கைகள் கொண்ட பேருந்துகளை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *