யாழ்ப்பாணம் அராலி கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்று நேற்றைய தினம் தீக்கிரையாகியுள்ளது. இதனால் பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
திடீரென தீ பிடித்து எரிந்ததாகவும் அதனை கட்டுப்படுத்த முயன்ற போதிலும் தீ வேகமாக பரவியதால் வீடு தீக்கிரையாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.