மணிக் கட்டுடன் கையை இழந்த இளைஞன் : யாழில் சம்பவம்
உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு வாள் வெட்டில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் மணிக் கட்டுடன் கையை இழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் புலோலி பகுதியை சேர்ந்த செல்வநாயகம் செந்தூரன் என்ற 30 வயதுடைய வாலிபனே பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மோதலை அடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பருத்தித்துறை பொலிஸார் சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தற்போது சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.