பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை !!

4 ஆயிரத்து 151 பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருநதோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கல் எனும் பெயரிலான முன்மொழி ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த யோசனையை நடைமுறைப்படுத்த பெருந்தோட்ட தொழில் முயற்சி மறுசீரமைப்புக்கள் இராஜாங்க அமைச்சு, தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக பெருந்தோட்டக் கம்பனிகள், அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்களில் வாழ்கின்ற 4,151 பயனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *