புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டு : பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞன் கைது !
தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செல்வராசா மேனகன் என்ற இளைஞன் மாத்தளை அம்மன் கோவிலில் வைத்து கடந்த 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் இருந்து கடந்த மாதம் 7 ஆம் திகதி இலங்கை வந்த இளைஞனிடம் வெடுக்குநாரிமலை ஆர்ப்பாட்டம் தொடர்பாக கடந்த 15 ஆம் திகதி புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கைது சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.