உடல் ரீதியான நெருக்கமோ அல்லது உணர்வு ரீதியான நெருக்கத்தால் வரும் உறவைத் தவிர வேறு சில காரணங்களாலும் உறவுகள் உண்டாவதுண்டு.
அதில் சில முக்கியமான உறவு நெருக்கங்கள் எதன் அடிப்படையில் உண்டாகின்றன என்று இங்கே பார்க்கலாம் வாங்க.
அறிவுசார் உறவு நெருக்கம் ( Intellectual Intimacy)
அறிவுசார் உறவு நெருக்கம் என்பது சமீப காலங்களில் இளைஞர்களிடையே அதிகரித்துக் கொண்டு வருகிறது என்று சொல்லலாம்.
பாட்னர்கள் இருவரும் அறிவுசார்ந்த கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடுவார்கள். விவாதங்களும் கூட அறிவு சார்ந்ததாகவே இருக்கும்.
உலக நடப்புகள் என்ன, அறிவார்ந்த விவாதங்கள், சமூகம் சார்ந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றில் அதிகமாக ஈடுபடுவார்கள்.
அனுபவம்சார்ந்த உறவு நெருக்கம் (experiential intimacy)
ஆண், பெண் இருவரும் ஆச்சர்யங்களையும் புதிய விஷயங்களை எதிர்கொள்ளவும் ஆர்வமாக இருப்பார்கள். அதுபோல ஆர்வமுடைய இரண்டு பேர் இணைந்திருப்பது தான் இந்த அனுபவம் சார் உறவு நெருக்கம்.
இவர்கள் இருவருக்கும் புதிய புதிய இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வது, மிகவும் பிடிக்கும். சாகச செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றை விரும்பி செய்வார்கள்.ரீகிரியேஷனல்
ரிலேஷன்ஷிப் இன்டிமஸி (recreational intimacy)
ரீகிரியேஷன் செய்யப்பட்ட விளையாட்டுக்கள், சாகசங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவதற்கு அதிக ஆர்வமுடைய இரண்டு பேர் இணைவது தான் இந்த ரீகிரியேஷனல் ரிலேஷன்ஷிப் இன்டிமஸி.
இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் போது தம்பதிகளுக்கு இடையே நண்பர்கள் போன்ற ஜாலியான உணர்வை அதிகரிக்கும்.
கிரியேடிவ் ரிலேஷன்ஷிப் (creative intimacy relationship)
எதையும் கிரியேட்டிவ்வாகவே யோசிக்கும் இரண்டு பேர் இணைவது தான் கிரியேட்டிவ் ரிலேஷன்ஷிப் இன்டிமஸி என்று சொல்வார்கள். படங்கள் வரைவது, ஓவியங்கள் வரைவது, மியூசிக் கம்போஸ் செய்வது, பாட்டு பாடுவது என கலைகளை இருவரும் சேர்ந்து ஆர்வமுடன் செய்யும் ரிலேஷன்ஷிப் தான் இது.