யாழில் எரிபொருள் பாரவூர்தி கவிழ்ந்து விபத்து !!

யாழ்ப்பாணம் மிருசுவிலில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி இன்று (22) அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதன் காரணமாக ஏ9 வீதியின் ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எரிபொருளுடன் யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்ற பாரவூர்தி மிருசுவில் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.