2018 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 298 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
விலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அல்லது காட்டு விலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தரமற்ற மின்சார வேலிகள் உட்படவற்றை நிறுவியதே இதற்கு காரணமாகும்.
2023ல் 72 யானைகளும், 2022ல் 50 யானைகளும், 2021ல் 66 யானைகளும், 2020ல் 31 யானைகளும், 2019ல் 41 யானைகளும், 2018ல் 38 யானைகளும் கொல்லப்பட்டதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
ஜனவரி 1 முதல் மார்ச் 10 வரை மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வுகளின் போது, 2,009 தனிப்பட்ட மின்சார வேலிகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர், அதில் 583 (29.02%) குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.