CBC TAMIL : சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரசாங்கத்திற்கு சொந்தமான தனியான வர்த்தக நிறுவனமாக நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு நேற்று (18) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையத்தை இன்னும் 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இயங்க வைக்கும் வகையில் மேம்படுத்த முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை கண்டறிந்துள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
ஆகவே சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை ஒரு பொது நிறுவனமாக நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தனியார் துறையின் முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
எதிர்காலத்தில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் திருகோணமலைக்கு மாற்றுவது மற்றும் அபிவிருத்தி செய்வது குறித்து ஆராயவும் தீர்மானிக்கப்பட்டது.