புதிய தேர்தல் முறை… ! வருகின்றது விகிதாசார முறை ….!
நாடாளுமன்றத் தேர்தல் முறையில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 160 பேர் வாக்காளர்களாலும் 65 பேர் தேசிய அல்லது மாகாண மட்டத்தில் விகிதாசார முறையிலும் தெரிவு செய்யப்படுவர்.
தேர்தல் முறைமையில் திருத்தத்தை கொண்டுவருவதற்காக பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகளை கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
தேர்தல் முறையில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு தேவையான சட்டங்களை உருவாக்க நீதி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.