வெடுக்குநாரிமலை ஆலய பூசகர் உட்பட ஐவரின் உண்ணாவிரத போராட்டம் முடித்து வைக்கப்பட்டது

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்குமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து பேரின் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

தங்களின் கைது நடவடிக்கை நீதிக்கு புறம்பானது என தெரிவித்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்படட்டடிருந்தனர்.

கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி இன்றைய தினம் வவுனியாவில் எழுச்சி பேரணி இடம்பெற்று, வவுனியா சிறைச்சாலை முன்றலில் நிறைவடைந்தது. மதகுருக்கள் மற்றும் அரசியில் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி இருந்தனர்.

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆலய பூசகர் மதிமுகராசா, எஸ்.தவபாலசிங்கம், கிந்துஜன், தமிழ்செல்வன், விநாயகமூர்த்தி ஆகிய ஐந்து பேருடனும் கந்துரையாடல் இடமபெற்றது.

அவர்களின் விடுதலைக்கு தாங்கள் பொறுப்பு என அவர்கள் வழங்கிய வாக்குறுதியினையடுத்து அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை இடை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிவராத்திரி தினத்தன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் 5 பேர் கடந்த நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *