வெடுக்குநாறி மலையை நோக்கி மக்கள் பேரணி: பொலிஸார் குவிப்பு
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் நோக்கி ஆரம்பமாகியுள்ள எழுச்சி போராட்டத்தை தடுக்கும் வகையில் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக குறித்த பகுதியில் சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் அச்சநிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வவுனியாவில் இடம்பெறும் மாபெரும் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகன பேரணி சற்று முன்னர் மாங்குளம் நகரை கடந்தது.
இதேநேரம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆலய பூசகர் உட்பட ஐவரின் உடல்நிலை மோசம் என தகவல் வெளியாகியுள்ளது.