ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பரிசாக வழங்கிய சொகுசு காரில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் பயணம் செய்துள்ளார்.
கடந்த செப்டம்பரில் ரஷ்யாவில், கிம் மற்றும் புடின் சந்திப்பை அடுத்து பியோங்யாங்கும் மொஸ்கோவும் நெருக்கமான உறவுகளை உருவாக்கியுள்ளன.
தனது உயர்தர ஆரஸ் செனட் லிமோசைனை முயற்சி செய்து பார்க்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்த நிலையில் குறித்த கார் பெப்ரவரியில் பியாங்யாங்கிற்கு வந்தது.
இந்நிலையில் நேற்று (15) வெள்ளிக்கிழமை, கிம் முதல் முறையாக காரைப் பயன்படுத்தினார் என அவரது சகோதரியும் முக்கிய அரசாங்க அதிகாரியுமான கிம் யோ ஜாங் தெரிவித்தார்.