அடுத்த ஆண்டு மீண்டும் இறக்குமதி : வாகனங்களின் விலை அதிகரிக்கும் – இறக்குமதியாளர்கள்

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அடுத்த ஆண்டு முதல் வாகன இறக்குமதி மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் அதன் தற்போதைய சந்தை விலைகள் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.

வரி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்படும் என உள்ளூர் வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி மாதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியதன் விளைவாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு கணிசமாக அதிகரித்துள்ளது.

புதிய வாகனங்களை இறக்குமதி செய்ததன் பின்னர் வாகனங்களின் தற்போதைய உள்ளூர் சந்தை விலைகள் அதிகரிக்கும் என சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதேநேரம் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அடுத்த வருடம் முதல் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த எதிர்பார்ப்பதாக கூறியிருந்தார்.