தமிழக மீனவர்கள் 15 பேர் யாழ் கடற்பரப்பில் கைது !!

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *