விபத்தில் சிக்கினார் முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன

அனுராதபுரம், திரிப்பனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (14) காலை 07.45 மணியளவில் திரிமன்ன பயணித்த கார் எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காரில் பயணித்த மேலும் மூன்று பேர், லொறியின் சாரதி மற்றும் மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *