எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி லங்கா சதொச விற்பனை நிலையங்களில் தேவையான அளவு முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமது விற்பனை நிலையங்களில் ஒரு முட்டையை 43 ரூபாயிற்கு கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த தள்ளுபடி இன்று (13) முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி மட்டுமே வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.